ஓட்டப்பிடாரம் அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-01-20 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் கோமதிநாயகம் (வயது 25). லாரி டிரைவர். இவர் கடந்த 16-ந்தேதி தூத்துக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மீனாட்சிபுரம் அருகே வந்தபோது நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதர்சன் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்