ஊஞ்சலூர் அருகே சாய் பாபா கோவில் கும்பாபிஷேகம்

ஊஞ்சலூர் அருகே சாய் பாபா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

Update: 2023-06-02 20:56 GMT

ஊஞ்சலூர் அருகே நடுப்பாளையத்தில் சாய் பாபா கோவில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து வாஸ்து சாந்தி, புண்யாகம், கும்பலங்காரம், முதல்கால யாக பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, திரவிய ஹோமம், யாத்ரா தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதைத்தொடர்ந்து காலை 6.45 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய் பாபாவை வழிபட்டனர். அப்போது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாய் பாபா அருள்பாலித்தார். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்