நாசரேத் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் காயம்

நாசரேத் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் காயம் அடைந்தார்.

Update: 2023-07-06 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள சின்னமதிகூடல் கிராமத்தைச் சேர்ந்த மைனர்பாண்டி மகன் பெல்வின் பாக்கியராஜ் (வயது 34). இவர் நாசரேத் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் பழுதுகாரணமாக புதுப்பச்சேரியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு பழுது பார்க்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கியெறியப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த இவர் தூத்துத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் நாசரேத் சப் இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்