நாசரேத் அருகேவாலிபருக்கு அரிவாள் வெட்டு

நாசரேத் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-04 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள நொச்சிக்குளத்தை சேர்ந்த செந்தூர் பாண்டி மகன் சந்தன செல்வன் (வயது 25). இவரது தாய் தமிழ்ச்செல்வி (42). சம்பவத்தன்று சந்தனசெல்வனும், தமிழ்ச்செல்வியும் அந்தப் பகுதியில் உள்ள குளத்துக்கரையில் மாட்டை கட்ட சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளியான அதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கணேசன் ( 30) என்பவர், மாடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் அரிவாளால் சந்தன செல்வனை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்