நம்பியூர் அருகே கிணற்றில் மூழ்கி மூதாட்டி சாவு

நம்பியூர் அருகே கிணற்றில் மூழ்கி மூதாட்டி இறந்தாா்.

Update: 2023-08-26 22:04 GMT

நம்பியூர்

நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பாத்தாள் (வயது 84). இவர் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய மகள் காளியம்மாள் (52) என்பவரின் அரவணைப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய கருப்பாத்தாள் புதுப்பாளையத்தில் உள்ள ஒரு கிணற்றில் மூழ்கி பிணமாக மிதந்து கொண்டிருப்பதை பொதுமக்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருப்பாத்தாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்