நம்பியூர் அருகேபச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
நம்பியூர் அருகே பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது.
நம்பியூர்
நம்பியூர் கோசனம் அருகே பச்சைநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பகலில் பச்சை பழத்தால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் இரவு அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் திறப்பு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அக்னி அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடந்தன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.