நம்பியூர் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 31). இவர் நம்பியூர் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான காரை உறவினரான தங்கராஜ் (19) என்பவர் எடுத்துக்கொண்டு நம்பியூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
ராஜீவ்காந்தி நகர் என்ற இடத்தில் சென்றபோது காரின் முன்பகுதியில் புகை வந்தது. உடனே காரை நிறுத்திய தங்கராஜ் காரின் முன்பகுதியை திறந்து பார்த்தார். அப்போது தீப்பிடித்து எரிந்தது தெரிந்தது. உடனே நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.