நம்பியூர் அருகே, ஆபத்தை உணராமல் பஸ்சின் பின்புற ஏணியில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்கள்

நம்பியூர் அருகே, ஆபத்தை உணராமல் பஸ்சின் பின்புற ஏணியில் தொங்கியபடிபள்ளி மாணவர்கள் பயணம் செய்தனா்.

Update: 2022-08-22 21:13 GMT

நம்பியூர்

நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் மற்றும் பட்டிமணியக்காரன்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த 2 பள்ளிக்கூடங்களும் நம்பியூர்- புஞ்சைபுளியம்பட்டி ரோட்டில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 6.15 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து நம்பியூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் 2 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்களும் ஏறினர். இதில் சில மாணவர்கள் ஆபத்தை உணராமல் பஸ்சின் பின்புறம் உள்ள ஏணியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.அப்போது அந்த வழியாக பஸ்சின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம், பஸ்சின் படிக்கட்டு மற்றும் பின்புற ஏணியில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள் என கூறி உள்ளனர். எனினும் பஸ் நிற்காமல் அப்படியே சென்று கொண்டிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்