நாலாட்டின்புத்தூர் அருகே ஜவுளி வியாபாரி மனைவி தூக்கு போட்டு தற்கொலை

நாலாட்டின்புத்தூர் அருகே ஜவுளி வியாபாரி மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-07-13 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகேயுள்ள விஜயாபுரி மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது 53). ஜவுளி வியாபாரி. இவருக்கு சுப்புலட்சுமி (47) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுப்புலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவர் தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவரும், பிள்ளைகளும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு உறவினர்களுடன் சாமி கும்பிட சென்று விட்டனர். சுமார் இரவு 7 மணியளவில் கோவிலில் இருந்து திரும்பி வந்த கணவரும், பிள்ளைகளும் பூட்டியிருந்த வீட்டுக்கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது சுப்புலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பதறிப்போன அவர்கள் கதறி அழுததை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று அவரது உடலை தூக்கிலிருந்து கீழே இறக்கினர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று சுப்புலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்