நாலாட்டின்புத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 17 அய்யப்ப பக்தர்கள் காயம்

நாலாட்டின்புத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 17 அய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2022-12-20 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 17 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேனில் சபரிமலைக்கு புறப்பட்டனர். வேனை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் (வயது 50) ஓட்டினார். சபரிமலை அய்யப்பன் கோ௳ிலில் தரிசனத்தை முடித்த அவர்கள் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு வந்தனர். பின்னர் நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வந்துகொண்டிருந்தனர். கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி, அருகே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து உருண்டது.

இதில் பாண்டியன் (50), விஜயகுமார் (41), மணிகண்டன் (36), மோதி (27), கார்த்திகேயன் (28), யுவராஜ் (26), ஜெயவேல் (41), சிவா (31), பார்த்தசாரதி (23), சபரி (32), சுகுமார் (25), குணசேகரன் (25), சுந்தரமூர்த்தி (30), கேசவன் (27), நேதாஜி, சுதன், கிஷோர் ஆகிய 17 பேரும் காயமடைந்தனர்.

தகவல் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், நாட்டின்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஆர்தர்ராஜ் மற்றும் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்