தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை அருகேவர்த்தக பொருட்காட்சி:அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை அருகே வர்த்தக பொருட்காட்சியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை அருகே அகில இந்திய வர்த்தக தொழிற் சங்கம் சார்பில் வர்த்தகக் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார். வர்த்தக கண்காட்சி மற்றும் பொருட்காட்சித் தலைவர் ஜோ பிரகாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு வர்த்தக கண்காட்சி மற்றும் பொருட்காட்சியை தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் வர்த்தகர்கள் தங்கள் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகள் அடங்கிய அரங்கங்கள் உள்ளன. பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள் அரங்குகள், உள்ளூர் உணவு வகைகளுக்கு தனித்தனி அரங்குகள், வெளிநாட்டுப்பறவைகள் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள், ராட்டிணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன. இந்த கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வ ருகின்றனர்.
நிகழ்ச்சியில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.