முத்தையாபுரம் அருகேவியாபாரி தற்கொலை

முத்தையாபுரம் அருகே வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-30 18:45 GMT

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ராஜீவ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி (வயது 52). வியாபாரி. இவர் முள்ளக்காடு பகுதியில் கம்மங்கூழ் கஞ்சி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக பண பிரச்சினையில் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்