மூங்கில்துறைப்பட்டு அருகே 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு பேரணி

மூங்கில்துறைப்பட்டு அருகே ‘நம்ம ஊரு சூப்பரு’ குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-09-08 15:49 GMT

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் ஒன்றியம் ரங்கப்பனூர் ஊராட்சி சார்பில் 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு பேரணி ரங்கப்பனூரில் நடைபெற்றது. பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தொடங்கி வைத்தார். பேரணியானது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் கிராமப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதற்கு பொதுமக்கள் முயற்சி எடுக்க வேண்டும், குப்பைகளை குப்பை தொட்டிகளில் கொட்டுவது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலர் திருமால்வளவன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்