மெஞ்ஞானபுரம் அருகே தாயாரை தாக்கிய வாலிபர் கைது
மெஞ்ஞானபுரம் அருகே தாயாரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள குமாரலெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி பூவம்மாள் (வயது 63). இவர்களது மகன் கோபால் ராமன். இவர் குடும்ப சொத்தை தனக்கு எழுதி தருமாறு கேட்டு தாயாரிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் வழக்கம் போல் தாயாரிடம் சொத்தை எழுதி தருமாறு கேட்டுள்ளார் அதற்கு தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபால் ராமன் தாயாரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பூவம்மாள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபால் ராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.