குரும்பூர் அருகே ரெயில் மோதி மினி பஸ் டிரைவர் பலி
குரும்பூர் அருகே ரெயில் மோதி மினி பஸ் டிரைவர் பலியானார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஓடக்கரைதெருவைசேர்ந்தவர் ஆறுமுகநயினார். இவருடைய மகன் ராமச்சந்திரன் (வயது35).இவர் மினி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று குரும்பூர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.