கோவில்பட்டி அருகேபுதிய சாலை, பயணியர் நிழற்குடை திறப்பு

கோவில்பட்டி அருகே புதிய சாலை, பயணியர் நிழற்குடை திறப்புவிழா நடந்தது.

Update: 2023-01-05 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்திதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட துளசிங்கநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.84 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட வாறுகால் வசதியுடன் கூடிய பேவர் பிளாக் சாலை, கிழவிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொச்சிலாபுரம் கிராமத்தில் ரூ.5½ லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.

இவற்றை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கொப்பம்பட்டி ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் கதிரேசன், மந்தித் தோப்பு ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்