கோபி அருகே கொள்ளை முயற்சி நடந்த வங்கியில் டி.ஐ.ஜி. ஆய்வு

கோபி அருகே கொள்ளை முயற்சி நடந்த வங்கியில் டி.ஐ.ஜி. ஆய்வு நடத்தினாா்

Update: 2023-06-20 20:27 GMT

கோபி அருகே உள்ள கூகலூரில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு வங்கியின் பின்புறம் உள்ள காற்றை வெறியேற்றும் மின்விசிறியை (எக்சாஸ்டர் பேன்) உடைத்து எறிந்துவிட்டு, அதில் இருந்து சிறிய துவாரம் வழியாக வங்கிக்குள் இறங்கி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் நடந்து உள்ளது. இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொள்ளை முயற்சி நடந்த வங்கிக்கு கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று வந்தார். பின்னர் அவர் வங்கியின் ஒவ்வொரு பகுதியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அங்கிருந்த வங்கி ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து வங்கியின் பின்புறத்துக்கு சென்று மர்ம நபர்கள் வங்கிக்குள் வந்த இடத்தையும் பார்வையிட்டார். வங்கிக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரைந்து பிடிக்கவும் அவர் கோபி போலீசாருக்கு உத்்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று அங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்