கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-09 18:45 GMT

கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் மகன் குமணன் (வயது 22). இவருக்கும், கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 16 வயதுடைய மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை குமணன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த மாணவி 3 மாத கர்ப்பமடைந்தார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து குமணணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்