கடம்பூர் சின்னசாலட்டி பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நேற்று சின்னசாலட்டி கொட்டினக்காட்டு பகுதியில் குப்புசாமி (வயது 53) என்பவருடைய குடிசையில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது குடிசைக்குள் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் குப்புசாமியை கைது செய்து, நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தார்கள்.