கடம்பூர் அருகே2 கன்றுக்குட்டிகளை ஈன்ற பசு மாடு

கடம்பூர் அருகே 2 கன்றுக்குட்டிகளை பசு மாடு ஈன்றது.

Update: 2023-01-17 22:24 GMT

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே உள்ள இருட்டிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். விவசாயி. இவர் வளர்த்து வந்த பசு மாடு சினையாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பசு மாடு ஒரு கன்றுக்குட்டியை ஈன்றது. சில நிமிடங்கள் கழித்து அடுத்ததாக 2-வதாக ஒரு கன்றுக்குட்டியையும் ஈன்றெடுத்தது. இதனைஅந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்