கடம்பூர் அருகே108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்

108 ஆம்புலன்சில்

Update: 2023-01-24 19:30 GMT

கடம்பூர் பெரியசாலட்டி அருகே உள்ள திண்ணையூர் பகுதியை சேர்ந்தவர் குமரன். அவருடைய மனைவி அழகுநாச்சி (வயது23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சில் அழகுநாச்சியை ஏற்றி பிரசவத்துக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

பெரியசாலட்டி அருகே சென்றபோது அழகுநாச்சி பிரசவ வலியால் துடித்தார். இதனால் டிரைவர் ஆம்புலன்சை நிறுத்தினார். பின்னர் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் அழகுநாச்சிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு ெபண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்