கோபி அருகே வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி கதி என்ன?;தேடும் பணி தீவிரம்

கோபி அருகே வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி கதி என்ன? என்று தொியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-02-06 21:34 GMT

டி.என்.பாளையம்

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள காந்திநகர் மேட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் பிரேம்குமார் (வயது 40). தச்சு தொழிலாளி. இவருக்கு ரீனா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு லாரன்ஸ் பிரேம்குமார் தனது குடும்பத்துடன் வந்து உள்ளார். பின்னர் நேற்று மதியம் அவர் தனது குடும்பத்தினர் 10 பேருடன் கொடிவேரி அணைக்கு குளிக்க வந்து உள்ளார்.

கொடிவேரி அணைப்பகுதியில் குளித்து விட்டு அங்குள்ள அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதியில் லாரன்ஸ் பிரேம்குமார் தனது குடும்பத்தினருடன் உட்கார்ந்து மீன் சாப்பிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால் லாரன்ஸ் பிரேம்குமாரை, வாய்க்காலில் தேடி உள்ளனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நீச்சல் தெரியாததால் அவர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என அவருடைய குடும்பத்தினர் எண்ணினர். மேலும் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்