கோபி அருகேகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கோபி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-08-16 22:17 GMT

கடத்தூர்

கோபி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கல்லூரி மாணவி

கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் ரிதன்யா (வயது 17). கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் ரிதன்யாவுக்கு ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படிக்க இடம் கிடைத்தது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் ரிதன்யாவை என்ஜினீயரிங் படிக்க வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தூக்குப்போட்டார்

கடந்த சில நாட்களாக ரிதன்யா தான் ஆசைப்பட்டதை படிக்க முடியவில்லையே என்று மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், விட்டத்தில் இருந்த கம்பியில் சேலையால் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரிதன்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்