கயத்தாறு அருகேபெண் விஷம் குடித்து தற்கொலை

கயத்தாறு அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-08 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி

கயத்தாறு அருகே வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் உள்ள கீழ்த்தெருவில் வசித்து வருபவர் சிதம்பரம். இவரது மகன் அண்ணாத்துரை (வயது 55). விவசாயி. இவருக்கு கடம்பூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகள் கற்பகவள்ளி(42) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் விவசாயத்துடன், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

குழந்தை இல்லை

பல ஆண்டுகளாக சிகிச்சை எடுத்தும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கற்பகவள்ளி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் கற்பகவள்ளி ஆடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அன்று மாலையில் தோட்டத்தில் பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர் தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, ' எங்கு சென்றாலும் நமக்கு இன்னும் குழந்தை இல்லையா? என உறவினர்கள் கேட்பதால் எனக்கு அவமானமாக இருக்கிறது. இதனால் நான் பூச்சி மருந்தை குடித்து விட்டேன் என கூறிவிட்டு மயங்கி விட்டாரம்.

சாவு

பதறிப்போன அண்ணாத்துரை அவரது உறவினர்களுடன் தோட்டத்திற்கு ஓடியுள்ளார். அங்கு மயங்கி கிடந்த கற்பகவள்ளியை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு சப்- இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று, கற்பகவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்