கயத்தாறு அருகேசூறாவளி காற்றுடன் பலத்த மழை
கயத்தாறு அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை
கயத்தாறு:
கயத்தாறு தாலுகாவைச் சேர்ந்த செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் நேற்று மாலையில் பலத்த இடி மின்னலுடன் பலத்த சூறாவளி காற்று மழை பெய்தது. இதில் ஆவுடையம்மாள், சின்னத்தாய், மாடத்தி, ஆகியோரின் வீடுகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் வீடுகள் பலத்த சேதமடைந்தன. வீடுகளில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்தவுடன் கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமிகிருஷ்ணசாமி துணை தலைவர் வெயிலாட்ச்சிஐயப்பன் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினரையும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். வீட்டின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரண உதவியை தாசில்தார் வழங்கினார். மேலும், இப்பகுதியில் 5 மின்கம்பங்களும், ஏராளமான மரங்களும் சாலையில் விழுந்தன. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.