கயத்தாறு அருகேவிவசாயிகள் தர்ணா போராட்டம்
கயத்தாறு அருகே விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே வில்லிசேரியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் சூடாமணி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.