எட்டயபுரம் அருகேகீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ ஆய்வு

எட்டயபுரம் அருகே கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-08-09 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர், உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ஆய்வகம், புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் காத்திருப்பு கூடம், அவசர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு ஆகிய இடங்களில் நோயாளிளை சந்தித்து குறைகள் கேட்டார். மேலும், மருத்துவ பணியாளர்களிடம் அடிப்படை பிரச்சினைகள் குறித்து குறைகளை கேட்டு அறிந்தார். தொடர்ந்து சுகாதார நிலைய வளாகத்தில் 100 மரக்கன்றுகளை வளர்க்க அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்த ஆய்வின் போது சுகாதார நிலைய கண்காணிப்பாளர் செந்தில் குமார், சித்த மருத்துவர் கார்த்திகா, கீழஈரால் கிளைச் செயலாளர், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்