ஈரோடு அருகே உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் சேவையில் பாதிப்பு

ஈரோடு அருகே உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது

Update: 2023-10-21 23:30 GMT

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் ரெயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி நேற்று காலை திடீரென அறுந்து விழுந்தது. இதனால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வழியாக வந்த சென்னை -இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், பெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஈரோட்டில் இருந்து புறப்பட்ட சரக்கு ரெயில் ஆகியவை ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் இந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே ஊழியர்கள் அங்கு சென்று அறுந்து கிடந்த கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி நிறைவுபெற்ற பின்னர் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக ரெயில் சேவை தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்