ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் ரூ.5.77 லட்சத்தில் பேவர் பிளாக் சாலையும், 2-வது தெருவில் ரூ.1.57 லட்சத்தில் பேவர் பிளாக் சாலையும் அமைக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, சாலைகளை திறந்து வைத்தார். இதில் ஏரல் பேரூர் தி.மு.க. செயலாளர் ராயப்பன், மாவட்ட விவசாய அணி துணைத் அமைப்பாளர் மதிவாணன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத், மாவட்ட பொதுச் செயலாளர் பிச்சையா, வட்டார தலைவர் தாசன், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, வருவாய் ஆய்வாளர் முத்துசரவணன், பொருளாளர் எடிசன், நகர தலைவர் பார்க்கர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.