தேவாரம் அருகே உலா வந்த காட்டு யானை
தேவாரம் அருகே ஒற்றை காட்டுயானை உலா வந்தது
தேவாரம் அருகே உள்ள தே.மீனாட்சிபுரம் பகுதியில் நேற்று அதிகாலை காட்டுயானை ஒன்று உலா வந்தது. அப்போது அங்கு நின்ற விவசாயிகள் அதனை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் வெகுேநரமாக அங்கேயே சுற்றித்திரிந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்லவே அச்சமடைந்துள்ளனர். எனவே அந்த பகுதியில் சுற்றித்திரியும் காட்டுயானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.