கூடலூர் அருகே தொழிலாளி தற்கொலை

கூடலூா் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-03 18:45 GMT

கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலை தம்மணம்பட்டி அருகே உள்ள மரத்தில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கீழே இறக்கி பாா்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விசாரணை நடத்தியபோது அருகில் பஸ் டிக்கெட் ஒன்று கிடந்தது. அதில் ஒரு செல்போன் எண் இருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.

அப்போது போனில் பேசியது கேரள மாநிலம், இடுக்கி கீரத்தோடு பகுதியைச் சேர்ந்த பாப்பா என்பதும், இறந்தவர் அவரது கணவரான மூர்த்தி (வயது 55) என்பதும் தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூர்த்தி கூலி வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்