கூடலூர் அருகே பலத்த மழையால் நிலச்சரிவு

கூடலூர் அருகே பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

Update: 2022-07-03 13:56 GMT

கூடலூர்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி தாலுகா பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் பலத்த மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் பலத்த மழை பெய்தது. அப்போது பகல் 3 மணிக்கு பொழுதன ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் அருகே திடீரென பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அதே பகுதியில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதை அறிந்த வைத்திரி தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து நிலச்சரிவு பகுதியில் ஆய்வு செய்தனர்.

இருப்பினும் மனிதர்கள் யாரும் நிலச்சரிவில் சிக்கி உள்ளார்களா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தது. தொடர்ந்து கால்நடைகள், வனவிலங்குகள் உயிரிழந்தது. முன்னெச்சரிக்கையாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து பொதுமக்களை வேறு இடங்களுக்கு மாற்றி அமைத்ததால் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்