சின்னமனூர் அருகே மின்சாரம் பாய்ந்து 3 பசுக்கள் பலி
சின்னமனூர் அருகே மின்சாரம் பாய்ந்து 3 பசுக்கள் பலியாகின
சின்னமனூர் அருகே உள்ள புத்தம்பட்டியை சேர்ந்தவர் விஜயராமர். இவர், 30-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இவர், வெள்ளையம்மாள்புரம் தென்பழனி சாலையில் உள்ள தனியார் நிலத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மின்வயர் அறுந்து கீழே கிடந்தது. இதில் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து 3 பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து விஜயராமர் கொடுத்த புகாரின்பேரில் ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.