சென்னிமலை அருகே லாரிகள் மோதல்; டிரைவர் காயம்

சென்னிமலை அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் காயம் அடைந்தாா்.

Update: 2023-05-22 21:13 GMT

சென்னிமலை

மதுரையில் இருந்து ஒரு லாரி நேற்று பழைய இரும்பு பொருட்களை ஏற்றி கொண்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சோழசிராமணியை சேர்ந்த பழனிசாமி (வயது 39) என்பவர் ஓட்டினார். சென்னிமலை அருகே காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு என்ற இடத்தில் லாரி சென்ற போது காங்கேயம் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 லாரிகளின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்கு இடையே பழனிசாமியின் கால் வசமாக சிக்கி கொண்டது. இதனால் காலை வெளியே எடுக்க முடியாமல் அவர் வலியால் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 20 நிமிடம் போராடி பழனிசாமியை மீட்டனர். காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் பழனிசாமியை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விபத்து ஏற்பட்டதும் மற்றொரு லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்