சென்னிமலை அருகேஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம்கத்திமுனையில் நகை பறிப்பு

சென்னிமலை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிக்கப்பட்டது

Update: 2023-07-17 21:22 GMT

சென்னிமலை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் கத்திமுனையில் நகையை பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஸ்கூட்டரில் சென்ற பெண்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள அத்தப்பம்பாளையம் ஐத்ரேயா நகரை சேர்ந்தவர் குமரேசன். அவருடைய மனைவி விஜய பிரியா (வயது 45). இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள திண்டல் பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் விஜய பிரியா நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு ஸ்கூட்டரில் அத்தப்பம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

தாலிசங்கிலி பறிப்பு

திண்டல் ரிங் ரோடு அருகே சென்றபோது அங்கு மர்மநபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென விஜய பிரியா வந்த ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தி வழிமறித்தார். பின்னர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிசங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து விஜய பிரியா வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாலிசங்கிலியை பறித்து விட்டு தப்பிய மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்