சென்னிமலை அருகே 2 இடங்களில் தீ விபத்து

சென்னிமலை அருகே 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-12 21:10 GMT

சென்னிமலை

சென்னிமலை அருகே உலகபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள வறண்டு கிடந்த புற்களில் தீ பிடித்தது. இது குறித்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

அதேபோல் சென்னிமலை அருகே பழைய பாளையம் பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பீடி, சிகரெட் பற்ற வைத்தவர்கள் தீயை அணைக்காமல் போட்டதால் தீ விபத்துகள் ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்