சத்திரப்பட்டி அருகே தாய்- மகன்கள் மீது தாக்குதல்: தம்பதி உள்பட 4 பேர் கைது

சத்திரப்பட்டி அருகே தாய்-மகன்கள் மீது தாக்குதல் நடத்திய தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-11 18:45 GMT


சத்திரப்பட்டி அருகே உள்ள காளிபட்டியை சேர்ந்தவர் மாசாணி (வயது 30). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (40). இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டு அருகே உள்ள பொது இடத்தை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மகுடீஸ்வரன், அவரது மனைவி பேச்சியம்மாள் (36), உறவினர்கள் காட்டமுத்து (26), கர்ணன் (22) ஆகியோர் சேர்ந்து மாசாணி, அவரது தாய் பழனியம்மாள் (60), தம்பி மதன்குமார் (25) ஆகியோரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த 3 பேரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகுடீஸ்வரன், பேச்சியம்மாள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்