போடி அருகேகார் மோதி முதியவர் படுகாயம்: வாலிபர் கைது

போடி அருகே கார் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-07-27 18:45 GMT

போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மொக்கைச்சாமி (வயது 60). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், போடி அருகே முந்தல் சாலையில் நடந்து சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் பிரபு (28) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்