போடி அருகேபெண்ணை தாக்கிய 2 பேர் கைது
போடி அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி அருகே உள்ள புதூர் நான்கு புளியமரம் பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரி (வயது 40). நேற்று முன்தினம் இரவு இவர், தனது கணவர், மகள் மற்றும் தங்கையின் மகன்கள் 2 பேருடன் வீட்டின் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (25), அபிராஜா (24) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் முன்விரோதம் காரணமாக முனீஸ்வரி மற்றும் அவருடன் இருந்தவர்களை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனீஸ்வரி குரங்கணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், அபிராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.