ஆத்தூர் அருகே விபத்தில் பொக்லைன் டிரைவர் படுகாயம்
ஆத்தூர் அருகே விபத்தில் பொக்லைன் டிரைவர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஆறுமுகநேரி:
விளாத்திகுளம் மேல்மாந்தை வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முனியசாமி (வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு மனைவியை மாமனார் வீட்டில் சென்று பார்ப்பதற்காக முக்காணிக்கு மோட்டார் சைக்கிளில் மேல்மாந்தையிலிருந்து வந்துள்ளார். இவர் பழைய காயலுக்கும் முக்காணிக்கும் இடையில் உள்ள கொடுங்கனி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முனியசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று ேசர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் ஈரோடு அந்தியூர் பெருமாள் மகன் ராம்குமார் (33) மீது ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.