ஆத்தூர் அருகேவாழை தோட்டத்தில் தீவிபத்து

ஆத்தூர் அருகே வாழை தோட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2023-08-02 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே கொழுவைநல்லூர் தேவர்தெரு பின்புறமுள்ள வாழைத்தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென தீப்பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் தீ பரவி அந்தப்பகுதியில் இருந்த சருகுகள் முழுவதும் தீப்பற்றியது. இதனையடுத்து திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் சாகுபுரம் டி.சி.டபிள்யூ தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்