ஆசனூர் அருகே தனியார் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்து விபத்து பயணிகள் உயிர் தப்பினர்
ஆசனூர் அருகே தனியார் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்து ஏற்பட்ட விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர்.
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு தனியார் பஸ் ஒன்று நேற்று காலை புறப்பட்டது. அந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தாளவாடி ஆசனூர் அருகே சென்றபோது அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பஸ்சின் முன்புற கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் மைசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.