ஆண்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆண்டிப்பட்டியில் ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

Update: 2022-10-10 16:25 GMT

ஆண்டிப்பட்டி அருகே வீரசின்னம்மாள்புரம் கிராமத்தில் 1.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஊழிக்காரன் ஊருணியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஊருணியில் தண்ணீரை பெருக்க முடியாத நிலை உருவானது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரித்த கோர்ட்டு ஊருணி ஆக்கிரமிப்பை அகற்றும்படி உத்தரவிட்டது. இதனையடுத்து ஆண்டிப்பட்டி தாசில்தார் யசோதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது ராஜதானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் போது ராஜதானி ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் பொன்னுச்சாமி, ஊராட்சி செயலர் ஜோதிபாசு ஆகியோர் உடனிருந்தனர். நீண்டகாலமாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்றியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்