ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-07-05 16:31 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள புள்ளிமான்கோம்பை கிராமத்தில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. லிங்கப்பநாயக்கனூருக்கு வந்த போது அங்கு 2 பேர் பஸ்சில் ஏறினர். பின்னர் அவர்கள் பஸ்சின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கண்டக்டர் இருவரையும் உள்ளே வரும்படி கூறினாா். அப்போது அவர்கள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைப்பார்த்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது பஸ்சில் இருந்து கீழே இறங்கிய 2 பேரும் அங்கு கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கண்டக்டர் ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தப்பி ஓடியவர்கள் வடக்கு மூனாண்டிபட்டியை சேர்ந்த முத்துச்சாமி (வயது 38), அன்னஞ்சியை சேர்ந்த பிச்சமுத்து (39) என்பது தெரியவந்தது. இதில் முத்துச்சாமியை போலீசார் கைது செய்தனர். பிச்சமுத்துவை தேடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்