ஆண்டிப்பட்டி அருகேபேரிடர் மீட்பு பயிற்சி

ஆண்டிப்பட்டி அருகே பேரிடர் மீட்பு பயிற்சி நடந்தது.

Update: 2023-01-30 18:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேரிடர் கால மீட்பு குறித்த பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பரிமளா தேவி தலைமை தாங்கினார். ஆண்டிப்பட்டி தாசில்தார் சுந்தர்லால் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் 100 தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டின்படி ரூ.9 ஆயிரம் மதிப்பிலான 14 வகை மீட்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் மூங்கில் ராஜா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் தேனி பொன்னம்பலம், பேரிடர் மேலாண்மை தாசில்தார் ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர் கதிரேசன், ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் உள்பட பலர் செய்திருந்தனர்.முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்