அன்னூர் அருகே அட்டகாச குரங்குகளை பிடிக்க கூண்டு வைப்பு வனத்துறை நடவடிக்கை
அன்னூர் அருகே அட்டகாச குரங்குகளை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
அன்னூர்
அன்னூர் அருகே பொகளூர் மாரியம்மன் கோவிலின் எதிரே உள்ள அய்யன், சென்னியப்பன் என்பவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று காலை குரங்குகள் கூட்டமொன்று நுழைந்துள்ளது. பின்னர், அங்கே இருந்த தென்னை மரங்களில் இருந்த இளநீர், தேங்காய்களை பறித்து நாசம் செய்துள்ளன. தொடர்ந்து இப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பார்வையிட்டனர். மேலும், வனத்துறையினர் பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.