ஆண்டிப்பட்டி அருகே இறந்து கிடந்த வியாபாரி

ஆண்டிப்பட்டி அருகே வியாபாரி இறந்து கிடந்தார்

Update: 2022-06-18 12:33 GMT

இடுக்கி மாவட்டம் மாட்டுக்கட்டா பகுதியை சேர்ந்தவர் ஜோமன் என்ற ஜாஸ்பர் (வயது 43). இவர், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ரெஞ்சிஸ் மோன், புனோயி ஆகியோருடன் தேனி மாவட்டத்திற்கு பலாப்பழம் விற்க வந்தார்.

இந்நிலையில் கடந்த 16-ந்தேதி இரவு ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர் பகுதியில் வாட்டர் டேங் அருகே 3 பேரும் படுத்து தூங்கினர். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது ஜோமன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிப்பட்டி போலீசார் ஜோமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்