அந்தியூர் அருகே வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு
அந்தியூர் அருகே வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது
அந்தியூர் அருகே உள்ள ஒட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது வீட்டின் முன்புள்ள அறையில் பாம்பு படுத்துள்ளதாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பாம்பு நாகப்பாம்பு என்பதும், அது சுமார் 5 அடி நீளமுடையது என்பதும் தெரியவந்தது. பின்னர் நவீன கருவியின் மூலம் பாம்பை பிடித்து ஒரு சாக்கு பையில் போட்டு அந்தியூர் வனச்சரகர் உத்தரசாமியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்தியூர் வனப்பகுதியில் கொண்டு சென்று பாம்பை விட்டனர்.