அந்தியூர் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

அந்தியூர் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Update: 2023-01-16 22:58 GMT

அந்தியூர்

அந்தியூரை அடுத்த பர்கூர் துருசணாம்பாளையம் மடத்தில் சாமியாராக இருப்பவர் ராஜேந்திர சாமி. இவருடைய காரில் பழுது ஏற்பட்டு இருந்தது. இதனால் அவர் தன்னுடைய காரை பவானியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் பழுதை சரி செய்ய விட்டிருந்தார். காரின் பழுது சரி செய்யப்பட்டதை தொடர்ந்து பவானி சென்று காரை எடுத்து வர துருசணாம்பாளையத்தை சேர்ந்த புட்டன் (வயது 36) என்பவர் சென்றார். பவானியில் இருந்து காரை எடுத்து கொண்டு துருசணாம்பாளையம் நோக்கி புட்டன் சென்று கொண்டிருந்தார். காரில் புட்டனின் நண்பர்களான அதே பகுதிைய சேர்ந்த பசுவன், மாதேஷ்வரன் ஆகியோரும் இருந்தனர்.

அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணைப்பகுதி மலைப்பாதையில் நேற்று முன்தினம் இரவில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதைத்தொடா்ந்து கார் தீப்பிடிக்க தொடங்கியது. இதை கண்டதும் உடனே காரை சாலையோரமாக புட்டன் நிறுத்தினார். உடனடியாக காரை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக காரில் வந்த 3 பேரும் உயிர் தப்பினர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்