அந்தியூர் அருகேவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலைகொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர்

அந்தியூர் அருகே கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-24 21:25 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை வழக்கில் சிறை

கோபி அருகே உள்ள கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர்களுடைய மகன் கார்த்திக் (வயது 21). இவர் மீது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரை கொலை செய்ததாக திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் கார்த்திக் கடந்த 25 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்து அந்தியூர் அருகே கோவிலூர் பகுதியில் உள்ள தனது அக்காள் கலைச்செல்வி வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவரிடம் கார்த்திக், 'நான் தாய், தந்தையை கொலை செய்யவில்லை. என் மீது பொய்யான புகார் தெரிவித்துள்ளனர்' என அடிக்கடி கூறி புலம்பி வந்துள்ளார்.

தற்கொலை

மனமுடைந்து காணப்பட்டு வந்த அவர் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். வெளியில் சென்றிருந்த கலைச்செல்வியும், அவரது கணவரும் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்